அல்குர்ஆனின் அற்புதங்கள் பகுதி-01
📜📜📜📜📜📜📜📜📜📜📜
📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖
https://www.facebook.com/110627933924757?referrer=whatsapp
மனித சிந்தனையின் படிமுறையான வளர்ச்சியை நாம் நோக்கும்போது ஒவ்வொரு காலப் பிரிவிலும், அதனை நெறிப்படுத்துவதில் அவ்வக் காலப் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய தத்துவங்கள், கருத்துகள், அறிவு மரபுகள் முக்கிய பங்கை வகித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த வகையில், எமது சமகாலப் பிரிவில் அறிவியலின் தாக்கம் மனிதனின் சிந்தனையிலும் உளப்பாங்கிலும் கண்ணோட் டத்திலும், சுருங்கக்கூறின், வாழ்வின் எல்லாத் துறைகளிலும் மிக ஆழமான பாதிப்பையும் தாக்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளதை நாம் உணர முடிகின்றது. இதன் காரணமாக குர்ஆனை நவீன அறிவியல் நோக்கில் ஆராயும் மரபு இன்று தோற்றமெடுத்துள்ளது. குர்ஆனின் கருத்துகள் நவீன அறிவியல் உண்மைகளோடு இணைந்து காணப்படுவதையும், இன்றைய பல நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை அல்குர்ஆன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே முன்னறிவிப்புச் செய்துள்ளதையும், குர்ஆனின் பல கருத்துகளை நவீன அறிவியல் உண்மைகள் உறுதிப்படுத்து வதையும் விளக்கும் பல முயற்சிகள் இன்று மேற்கொள்ளப்படுவதை நாம் காணமுடிகிறது. இத்துறையில் விசேட கவனம் செலுத்தும் ஆய்வாளர் பலர் இன்று காணப்படுகின்றனர். பேராசிரியர் மொரிஸ் புகைல் (MOURICE BUCAILLE)இ கலாநிதி ஸக்லுல் அந் நஜ்ஜார், ஷெய்கு ஸிந்தானி போன்றோர் இத்துறையில் முக்கியமானவர்களாவர்.
அல்லாஹ் தனது கடைசி தீர்க்கதரிசி நபி முஹம்மத்(ஸல்)க்கு பல அற்புதங்களையும் பல ஆதாரங்களையும் அளித்துள்ளான். இதன் மூலம் நபிகள் நாயகம் கடவுள் அனுப்பிய உண்மையான தீர்க்கதரிசி என்பதை நிரூபிக்கிறார்கள். மேலும்,இந்த குர்ஆனை அல்லாஹ் தன்னால் அருளப்பட்ட நேரடி வார்த்தை என்பதை நிரூபிக்கும் முகமாக பல அற்புதங்களுடன் அருளியுள்ளான். மேலும் அது எந்த மனிதராலும் எழுதப்படவில்லை,இயற்றப்படவில்லை. இத்தொடர் கட்டுரை இது தொடர்பான ஆதாரங்கள் சிலவற்றை விவாதிக்கிறது.
அல்-குர்ஆன் என்பது கடவுளின் நேரடி வார்த்தையாகும், இது அவன் தனது தீர்க்கதரிசி முஹம்மத்(ஸல்)அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) மூலம் வெளிப்படுத்தினான்.இதை முஹம்மது மனனம் செய்தார்கள்.பின்னர் தனது தோழர்களுக்கு மனனமிடுமாரு ஆணையிட்டார்கள்.அவர்கள் அல்-குர்ஆனை மனனம் செய்து அதனை முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் மதிப்பாய்வு செய்தனர்.மேலும் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை தேவதூதுவர் ஜிப்ரீல்(அலை)அவர்களுடன் குர்ஆனை மறுபரிசீலனை செய்தார்கள்.நபிகளார் வாழ்க்கையின்இறுதி ஆண்டில் மாத்திரம் இரண்டு முறை மறுபரிசீலனை செய்தார்கள். அல்-குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அல-குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்த ஏராளமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்,வாழ்ந்து மறைந்திருகிறார்கள். அவர்களில் சிலருக்கு அல்-குர்ஆன் முழுவதையும் பத்து வயதிற்குள் மனனம் செய்ய முடியுமாக இருந்தது. அல்-குர்ஆனின் ஒரு எழுத்து கூட பல நூற்றாண்டுகளாக அன்றும், இன்றும், என்றும் மாற்றப்படப்போவதில்லை. அல்ஹம்துலில்லாஹ்....
📖📖📖 (தொடரும்....)
No comments:
Post a Comment